மலையாண்டிகவுண்டனூர் – வீட்டு வசதி வாரிய நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க கோரிக்கை:

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மலையாண்டிகவுண்டனூர் கிராமத்தில், தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 24 ஏக்கர் நிலம் உள்ளது. (புல எண்: 688/2B, 699/3, 660/2, 661/2B).

இந்த இடத்தில் 1996 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும், மிகக் குறைந்த பயனாளர்களுக்கு மட்டுமே ஒப்படைக்கப்பட்டு, தொடர்ந்து குடியேற்றம் இல்லாத காரணத்தால் கட்டிடங்கள் முற்றிலும் சிதிலமடைந்து தரை மட்டமாக மாறியுள்ளன. தற்போது அந்த நிலம் எந்தப் பயனும் இன்றி பயன்பாடின்றி உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, உடுமலை ஒன்றிய கழகச் செயலாளர் SKM.தங்கராஜ் ஆகிய எனது சார்பில் 01.02.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அந்த நிலத்தை உரிய முறையில் ஆய்வு செய்து

* ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும், அல்லது

* வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்து வீடு இல்லாத மக்களுக்கு வழங்கவும்

  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top