உடுமலை அரசு போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட கல்லாபுரம் முதல் உடுமலைப்பேட்டை வரை இயக்கப்பட்டு வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து வழித்தட எண்: 6, காலை 7:30 மணிக்கு கல்லாபுரத்திலிருந்து புறப்பட்டு, எலையமுத்தூர், பெரிசனம் பட்டி, தும்பலப்பட்டி (காலை 8:15 மணி), மலையாண்டிபட்டினம் ஆர்ட்ஸ் கல்லூரி வழியாக உடுமலைப்பேட்டையை காலை 8:50 மணிக்கு வந்தடைகிறது.
இந்த வழித்தடத்தில் தற்போது ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால், காலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பல்வேறு ஊர்களிலிருந்து உடுமலைப்பேட்டையை நோக்கி வர இந்த பேருந்தையே பயன்படுத்தும் நிலை உள்ளது. இதன் காரணமாக, பள்ளி நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் பேருந்தில் ஏற முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தும்பலப்பட்டி மற்றும் அதன் பின் வரும் ஊர்களிலிருந்து பயணம் செய்யும் பள்ளி குழந்தைகள், பேருந்தில் இடம் இல்லாத காரணத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் நிலை தொடர்கிறது.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பும் கல்வி உரிமையும் பாதிக்கப்படாத வகையில், உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், பள்ளி நேரத்தை முன்னிட்டு காலையிலும் மாலையிலும் சிறப்பு பேருந்து இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இப்பிரச்சினையை SKM.தங்கராஜ் (எ) எஸ்.கே.மெய்ஞான மூர்த்தி ஆகிய நான் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கை முன்வைத்துள்ளேன்.